Home
எழுத்தாளர் அறிமுகம்-5 PDF Print E-mail
Written by ஐரேனிபுரம் பால்ராசய்யா   
Wednesday, 20 June 2012 10:48

எழுத்தாளர்  காஞ்சி சாந்தன்

 

பட்டு என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் ஊர். காஞ்சிபுரம் பட்டுக்கு மட்டுமல்ல, கவி எழுதும் பல கவிஞர்கள் கொண்ட ஊர் என்பதிலும் பெருமையுண்டு. அந்த கவிஞர்க்ளில் இலக்கிய அடையாளம் கானப்பட்டு அகவை முதிர்ந்த தமிழறிஞராக, தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கவிஞர் காஞ்சி சாந்தன் அவர்கள்.

இவரது இயற்பெயர் செல்வராஜ் என்றாலும் காஞ்சி சாந்தன் எனும் புனைப்பெயரில் பல கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி இலக்கிய வீதியில் பலருக்கும் நன்கு பரிச்சயமானவர்.

இவரது கவிதைதொகுப்பு நூலாகிய ``விழிப்பூ’’ வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் நூலாக அமைந்து இளைய சமுதாயத்தினர் அனைவரது கைகளிலும் தவழும் நூலாக அமைந்திருக்கிறது. இந்த கவிதைநூலில் சமூக விடுதலைக்கான கோபம் கொப்பளிக்கும் வரிகளும், அன்பை ஆயுதமாக்கும் அற்புத வரிகளும் மலிந்து கிடக்கின்றன.

நியாயங்கள் நசுக்கப்படுவதும் அனியாயங்கள் அரியணை ஏறுவதையும் வேதனையோடும் வலிகளோடும் இவரது கவிதை வரிகள் கதறி அழுவது படிப்பவரின் நெஞ்சைப் பிழிகிறது.

இவரது சிறுகதை தொகுப்பு நூலான ~வீம்பு’’ பாதுகாக்கப்படவேண்டிய நூல்க்ளில் ஒன்று. மனித நேயத்தையும் எதார்த்தமான நிகழ்வுகளையும் உள்வாங்கி படைக்கப்பட்டிருக்கிறது. அறிவுசார்ந்த கருத்தாளமிக்க பல கதைகள் திணிக்கப்பட்டிருப்பதால் படிப்பவர் பலரையும் லெகுவாய் ஈர்த்துவிடுகிறது.இந்நூல் 1989-90 ல் தாம்பரம் கிறிஸ்தவக்கல்லூரி பி.ஏ பயின்ற மாணவர்களுக்கு துணைப்பாடநூலாக வைக்கப்பட்டிருந்தது.

இவரது மற்றொரு சிறுகதை தொகுப்பு நூலான ``ஊற்றுக்கண்’’ நூலில் யதார்த்தம் வரிந்து கட்டிக்கொண்டு முன்னால் வந்து நின்று விடுகிறது. உணர்ச்சிகள் வார்த்தைகளாய் வந்து விழுந்து விடுகிறது. இந்நூலில் பதிவாகியிருக்கும் ஒவ்வொரு கதைகளும் ஏற்படுத்தும் அதிர்வுகள் நம்மை ஆட்கொண்டு விடுகிறது.

சமுதாயத்தின் வலிகளும், வாழ்வுகளும் மகிழ்ச்சிகளும் படைப்புகளாக பரிணமிக்கும்போது நம்மை மீறிய பாராட்டுக்கள் காஞ்சி சாந்தன் அவர்களின் இதயம் நோக்கி பயணப்பட்டு விடுகின்றன.

கவிதைக்கென்று மன்றம் நடத்தி வருவ்து இவரது முக்கிய பணிகளில் ஒன்றாகும்.காஞ்சி கவிமன்றம் எனும் அமைப்பின் அமைப்பாளராகவும் தலைவராகவும் இருந்து இலக்கிய தொண்டாற்றியுள்ளார்.

கவின்ஞர் பொன் கவிக்கோ, சேதுராமன், பொன்னடியான், கவிப்பேரரசு வைரமுத்து,என பல்வாறு கவிஞர்கள் இந்த கவி மன்றத்துக்கு வந்து தங்கலது கவிதைகளையும் வாழ்த்துரைகளையும் வழங்கியிருக்கிறார்கள்.

இவர் திசைகள் வார இதழின் செங்கை மாவட்ட ஆசிரியராகவும், சாரல் இலக்கிய இதழின் ஆசிரியராகவும் பதிப்பாசிரியராகவும். கலயம் மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் பணியாற்றி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

அறிஞர் அண்ணா அவர்களின் காஞ்சி வார இதழ் தொடங்கி நூற்றுக்கணக்கான ஏடுகளில் கவிதை எழுதியிருக்கிறார்.

சொந்தமாக கவிதா பிரசுரம் எனும் ஒரு பதிப்பகத்தை துவங்கி ``விழிப்பூ’’ ``வீம்பு’’ ``கமலி காத்திருக்கிறாள்’’ போன்ற நூல்களை அச்சிட்டுள்ளார்,

திரு சாண்டில்யன் அவர்களின் பல்லவதிலகம் நாவல் நாடக வடிவம் பெற்று அரங்கேறியபோது அதில் நகைச்சுவை பகுதியை எழுதும் வாய்ப்பு பெற்றதை பெருமையாக கருதுகிறார்.

இலக்கிய போட்டிகளில் இவர் பெற்ற பரிசுகளும் பாராட்டுகளும் ஏராளம். சென்னை பாரதி தமிழ்சங்கம் தமிழ்நாடளவில் நடத்திய கவிதைப்போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது பரிசு பெற்றிருக்கிறார். புதுச்சேரி முத்தமிழ் சங்கம் நடத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறார்.

காஞ்சியில் கவிதைச்சோலை அமைப்பின் மூலம் பாவேந்தர் பட்டயம் பாவேந்தரின் புதல்வர் அவர்களால் வழங்க்ப்பட்டது. அம்பேத்கார் இலக்கிய அமைப்பின் மூலம் பாவலர் முரசு விருது வழங்கப்பட்டிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து பேரவை காஞ்சிபுரம் கிளை சார்பாக வெள்ளி பணமுடிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இவர் மேலும் பல நூல்கள் எழுதி வெளியிட முதற்சங்கு சார்பில் வாழ்த்துகிறோம்.

முகவரி : பல்லவன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காஞ்சிபுரம்-631 501 கைபேசி 9600976176

 

 

 

 

Last Updated on Wednesday, 20 June 2012 10:50